அன்புள்ளவர்களுக்கு,
கணினி மொழிகள் பல கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் உதயமாகின. இதனால் தானியங்கியாக செயல்கள் மனித சமூகத்திற்கு பயன்படுகின்றன. தகவல் தொடர்புக்கும், சேமிப்புக்கும் கணினி மொழிகள் உபயோகமாகின்றன. கணினியை பொறுத்தமாட்டில் இவை வெறும் கட்டளைகள். மனிதனை சார்ந்து உச்சரிப்பு இல்லாத - மௌனம் பேசிடும் வகையில் வாழ்கின்றன்.
உதாரணத்திற்கு 'சி' என்கின்ற கணினி மொழி 'பி.எச்.பி' மற்றும் இன்னும் பிற மொழிகளுக்கு கருத்தாக்கம் செய்தல் பயன்படும்.
ஒரு முறை செயலியை கண்டறிந்து, பலருக்கும் பயன்பட செய்தல்.
தாயம் என்ற எனது செயலி J2MEல் முதலில் வடிவமைத்தேன்.
இதை பலரும் பயன்பட JSல் மாற்றி வடிவமைத்தேன், இதனால் மடிக்கணியில் பயன்படுத்திட வழி,, பிறந்தது.
இதையே Androidல் வடிவமைத்து மொபைலில் பயன்பட செய்தேன்.
தாயம் விளையாட்டு மூலம், ஒரு முறை செயலி வடிவமைத்து, பல கருவிகளில் விளையாட எளிய வழி கண்டேன்.
(J2ME to Android Mobile and JS Laptop.)
தானியங்கி முறையில் பல கருவியில் நிறுவுதல்
சுடாகு விளையாட்டை முதலில் ஜாவாவில் வடிவமைத்தேன். தனிப்பட்ட
ஜாவா லேப்டாப்பில் செயல்பட்டது.
பின்னர், எல்லோரும் பயன்பெற, இணையமயம் தேவைப்பட்டது.
தாயம் மாதிரி நானாக மாற்றாமல், கணினி மொழி மாற்றி உதவியை பயன்படுத்தினேன். ஜாவாயிலிருந்து ஜாவா ஸ்கிரிப்ட் மாற்றிக்கு கீழ்கண்ட
தானியங்கி பயன்ப்பட்டது.
(JAVA SUDOKU Engine Becomes JAVA SCRIPT Sudoku Engine by Automation)
தாயம், சுடாகு ஆகியன பல கருவியில் பயன்தருகின்றன தானியங்கி செயல்முறையில்.
Comments