ஆன்மீகம் நமது பலம்
மனிதனின் துன்பத்திற்கு காரணம் பேராசை
---புத்தர்
சீவன்களின் பசி முதற்கொண்டு ஏற்படும் துன்பம் தீர பணி செய்திட வேண்டும்
----அருட்பிரகாச வள்ளலார்
மனிதனின் துன்பம் துயரம் இவற்றிலிருந்து மீட்பது தான் ஆன்மீகம்
----சுவாமி விவேகானந்தர்
அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி அருளாசி
-----------------------------------------------------------------
1. கடலில் அலை என்பது தண்ணீரின் மூலமே நடைபெறுகின்றது,
உலக நடைமுறையும் சிவசக்தியால் நடைபெறுகின்றது.
இவை தான் உணர்வாகின்றது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்கின்றோம். சீவகாந்தம் தடைபடும் போது தடைபடும் இடத்தில் வலி உண்டாகின்றது, நோய் என்கின்றோம்.
3. காயகல்ப பயிற்ச்சி மூலம் உடல் வலு பெறுகின்றது. சீவகாந்தம் தடையின்றி
உடலில் சுழல்கின்றது. கை, கால், கண், உடலில் 14 புள்ளிகளில் அழுத்தம் தந்து
ஆரோக்கியம் மேம்படுகின்றது.
4. துரிய தவம் என்பது மூலாதாரம், சுவாதீட்டானம், மணிப்புரா, அநாஹா, விசுத்தி, ஆக்நை, சகஸ்ஸாரா ஆகிய சக்தி மையங்களை ஒளிபெறச் செய்து நன்மை அடைவது.
5. பஞ்சபூதம், நவக்கிரக தவம் என்பது பிரபஞ்ச சக்திகளான மண், நீர், காற்று, அக்னி நிலவு, நட்சத்திரம், சூரியன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு-கேது, சுத்த வெளி, சிவசக்தியை மையமாக தவம் செய்து நன்மை அடைதல்.
ஶ்ரீவாணி சகோதரி, பிரம்ம குமாரி ஆன்மீக போதனைகள்
----------------------------------------------------------------------------------------
அன்பு, அருள், மகிழ்ச்சி, ஆரோக்யம், நல்லுறவு, லாபம், வெற்றி, அமைதி
அனைவரும் வாழும் வாழ்வில் கிடைத்திட தவம் இருக்கின்றனர்.
இவைகள் நிரம்ப வாழும் வாழ்வு பொன்னான வாழ்வு.
இதை அடைய தடையாக உள்ளது என்ன என்பதை அறிவது நன்று.
கோபம், பயம், பொறாமை, சுயநலம் ஆகியவை கேடு பயப்பன.
இவைகள் மிகுதியானால் கற்கால வாழ்வு.
கற்கால வாழ்வா, பொன்னான வாழ்வா நம் கையில் உள்ளது வாழ்க்கை.
நல்லதே எண்ணி நல்லதே நடக்கும் என்ற நல்லெண்ணம் தான் வலிமை.
1.
உன் மனநலம் சார்ந்த எண்ணங்களை நீயே உருவாக்கு. உன் பிரச்சினைகளுக்கு
தீர்வு உன்னிடமே உண்டு. அனைவருக்கும் நன்மை செய்யும் நல்லெண்ணமே நமக்கு
தேவை எப்பொதும்.
3. தினசரி காலை முதல் ஒரு மணி நேரம் ஆன்மீக தேடல் தேவை, அப்பொது நம்முள் சக்தி பிறக்கும். ஒவ்வொரு மணி நேரமும் இடையில் சக்தியை புதுபித்து கொண்டு வரவேண்டும்.
இரவு தூங்க செல்லும் முன் மனதை அமைதிப்படுத்த வேண்டும். இதை கடைபிடித்தால் அன்றாடம் நம் உறவு நல்ல முறையில் அமையும்.
4. நான் அமைதி, நான் அருள், நான் வெற்றி, நான் ஆரோக்யம், நான் மகிழ்ச்சி என்று மனதிற்குள் பேசி வரவேண்டும். இவை நமக்கு நாமே செய்யும் நல்லவை.
5.நம்மை நாமே அன்றாடம் மன்னித்துவிட வேண்டும், பிறரின் வேண்டாத செயலையும்அன்றாடம் மன்னித்து விட வேண்டும். இதனால் மனபோராட்டம் ஒழிந்து மனம் நிம்மதி அடையும்.
6.சரியான எண்ணங்கள் தான் சரியான இலக்கை அடைய உதவுகின்றன.
ஆன்மீகம் நமக்கு சரியான எண்ணங்களை தருகின்றன.
Comments